டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 12ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வாழ்வா சாவா என்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கு வகையில் மைக்கேல் ஜோன்ஸ் 4 ரன்களிலும், மேத்யூ கிராஸ் 1 ரன்னிலும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 13 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜ் முன்ஸி அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு உறுதுனையாக காலம் மெக்லீட் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து வந்தார்.
பின்னர் 54 ரன்கள் சேர்த்த நிலையில் முன்ஸி ஆட்டமிழக்க, அடுத்து வந்த மைக்கேல் லீஸ்க் தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை அடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் நிதான ஆட்டத்தைன் வெளிப்படுத்தி வந்த மெக்லீடும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நகவரா, டெண்டாய் சதாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.