டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன குரூப் எ ,குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்பிறகு அரை இறுதி , இறுதிப் போட்டி என நடைபெறும். டி20 உலக கோப்பையில் வியாபார நோக்கில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் கடைசிவரை விளையாடினால் மட்டுமே ஐசிசிக்கு நிறைய வருமானம் கிடைக்கும். இதனை மனதில் வைத்துக் கொண்டு குரூப் சுற்றிலே இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் மோதுவது போல் ஐசிசி தொடரை வடிவமைத்து இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கத்துக்குட்டி அணிகளுடன் இவ்விரு அணிகளும் விளையாட உள்ளது. அதன்படி அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுடன் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளது. அதே சமயம் டி20 உலக கோப்பையில் தொடக்கத்தில் இவ்வளவு எளிதான அணிகளுடன் இந்தியா மோதுவது சரியில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
- குரூப் பி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
- குரூப் சி - நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
- குரூப் டி - தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.