டி20 உலகக்கோப்பை: கீதத்தை வெளியிட்டது ஐசிசி!

Updated: Thu, Sep 23 2021 17:47 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருந்த 7ஆவது டி20 உலகக் கோப்பை தொடரான கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. 

துபா, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதில் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 24 அன்று துபாயில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான கீதத்தை ஐசிசி தங்கள் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. லிவ் தி கேம் என்கிற பாடலுக்கு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை