டாஸ் குறித்து எங்களுக்கு கவலையில்லை - ஜஸ்டின் லங்கர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எளிதில் சாய்த்து விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டது ஆஸ்திரேலிய பெரும் அடியைக் கொடுத்துள்ளது. அதுவும் ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற மேத்யூ வேட் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது அண்டை நாடான நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் பற்றி எங்ககளுக்கு கவலையின்றி அச்சமின்றி விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இறுதிப் போட்டியில் டாஸ் போன்ற காரணிகளை பொருட்படுத்தாமல் வெற்றி பெறும் மனநிலையுடன் ஆஸ்திரேலியா வரும். முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது முதலில் பந்துவீசினாலும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது.
Also Read: T20 World Cup 2021
நாங்கள் தொடர்ந்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுவோம். மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்த உடனே ஷதாப் கான் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் அடித்த சிக்ஸர்தான் பயமற்ற கிரிக்கெட். நியூசிலாந்து உண்மையிலேயே நல்ல அணி. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். அதனால் நியூசிலாந்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.