ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Advertisement

ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார். அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்துள்ள விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் சதாப் கான், ஷாஹின் அஃப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரண், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

ஐசிசி-யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். இறுதி போட்டி முடிந்த பிறகு சாம்பியன் கோப்பை வழங்குவதற்கு முன்னதாக இதன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் யார் என இறுதிப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் கேப்டடன் ஜோஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், “என்னை பொறுத்தவரை தொடர் நாயகனாக சூர்ய குமார் யாதவை தேர்வு செய்வேன். சூர்யகுமார் யாதவ் மிகவும் சுதந்திரமாக விளையாடினார். கோலி, ரோஹித் போன்றோர் அணியில் இருக்கும் போது இவர் விளையாடிய விதத்தை பார்த்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர் ஒரு அற்புதமான வீரர் என்றார்.

மேலும், சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் ஆகியோரும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கும் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

தொடர் நாயகன் விருது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம், “சதாப் விளையாடும் விதத்தை பார்க்கும் போது அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகச்சிறப்பாக உள்ளது, அவரது பேட்டிங் விதம் மேம்பட்டுள்ளது. கடைசி 3 போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டமும், அவரது சிறந்த பீல்டிங்கும் அவரை தொடர் நாயகன் விருதுக்கான பட்டியலில் முக்கிய வீரராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News