இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம் - ஐடன் மார்க்ரம்!

Updated: Sat, Jun 29 2024 13:11 IST
இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம் - ஐடன் மார்க்ரம்! (Image Source: Google)

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் நடைபெறவுள்ளது. 

இதில் தென் ஆப்பிரிக்க அணியானது வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணியும் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் இறுதிப்போட்டி குறித்தும், இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய மார்க்ரம், “அநேகமாக, நான் இப்போட்டியை ஒரு புதிய கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கிறேன். நேர்மையாக கூற வேண்டுமெனில் இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஒரு அணியாக, தென் ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் விரும்பிய அளவுக்கு போட்டிகளில் எங்களால் முன்னேறவில்லை. எனவே, இந்தியாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது கனவை அடைய நல்ல சந்தர்பம் கிடைத்துள்ளது. மேலும் இது எங்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக நான் பார்க்கிறேன். 

இந்த தொடரில் நாங்கள் பல நெருங்கிய முடிவைக் கொண்ட போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஏறத்தாழ அவை அனைத்து போட்டியின் முடிவை பாதிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அந்த தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைக் கண்டுள்ளோம். இதுவரை தொடர் முழுவதும் நாங்கள் இது போன்ற போட்டிகளில் இரண்டு, மூன்று, முறை செய்திருப்பது, எந்த நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அணிக்கு அளித்துள்ளது .இது ஒரு அணிக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்,

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் தற்போது நாங்கள் இறுதிப்போட்டியிலும் அதுபோன்ற முடிவை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இது எங்களுடைய முதல் இறுதிப் போட்டியாகும். அதனால் இந்த முதல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் நாங்கள் விரும்புகிறோம். மேலும் வரும் ஆண்டுகளில், ஒரு குழுவாக எங்களைப் பற்றி பலர் என்ன சொல்கிறார்கள் என்பதன் சுமையை இது உடைக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை