டி20 உலகக்கோப்பை: வெற்றியாளரை டாஸ் முடிவு செய்யாது - ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Sat, Nov 13 2021 17:44 IST
T20 World Cup Final: Aaron Finch reckons toss won't be big factor against New Zealand (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. 2-வதாகப் பந்துவீசிய பல அணிகள் பனிப்பொழிவுச் சிக்கலை எதிர்கொண்டு தோல்வியடைந்தன.

இதனால் டாஸ் வென்ற பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீசவே முடிவெடுத்தன. பெரும்பாலான ஆட்டங்களில் 2ஆவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றதால் இறுதிச்சுற்று ஆட்டத்திலும் வெற்றியாளரை டாஸ் முடிவு செய்யுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், “டாஸால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலகக் கோப்பைப் போட்டியை ஜெயிக்க வேண்டுமென்றால் முதலில் பேட்டிங் செய்தும் ஜெயிக்க வேண்டும். 

பாகிஸ்தானுக்கு எதிராக டாஸில் தோற்க வேண்டும் என எண்ணினேன். அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் குவிக்க வேண்டும் என எண்ணினேன். டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய மாட்டோம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிச்சுற்றிலும். 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்து கோப்பையை வென்ற சென்னையைப் பார்த்தோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக ரன்களை எடுப்பதால் எதிரணி பேட்டிங் செய்யும்போது தவறுகள் செய்யத் தூண்ட முடியும். 

Also Read: T20 World Cup 2021

டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு. எதிரணி அதிக ரன்களைக் குவித்துவிட்டால் இலக்கை விரட்டுவது கடினம். நியூசிலாந்து அணியை வெல்வது சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை