ஐக்கிய அரபு அமீரகத்தில்  டி20 உலகக்கோப்பை - தகவல்

Updated: Fri, Jun 25 2021 23:14 IST
Image Source: Google

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . 

ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்படுமா என்ற சாந்தேகம் எழுந்தது. அதற்கேற்றவாரே டி20 உலகக்கோப்பை நடத்தும் இடம் குறித்து பிசிசிஐ அறிவிக்கும் மாறு ஐசிசி கெடு விதித்திருந்தது. 

இதற்கிடையில் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலில், ஐபிஎல் தொடர் முடிந்த 2 நாள்களில் டி20 உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது. 

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் அணிகள் இரு குழுக்களாக பிரிந்து லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதில் இருகுழுவிலும் முதல் இரு இடங்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை