டி20 உலகக்கோப்பை: 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!

Updated: Mon, Oct 04 2021 13:56 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெறவுள்ளது. அதன்படின் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கிய, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. 

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்த ஆலோசனையில் ஐசிசி, பிசிசிஐ தீவிரம் காட்டி வந்தன. 

அந்தவகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போட்டிகளில் 70 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள கரோனா நெறிமுறைகள் குறித்து ஐசிசி, பிசிசிஐ தீவிரம் காட்டிவருகின்றன. மேலும் ஓமனிலும் 3ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடந்துவருகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை