ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மிர்வாஸ் அஷ்ரஃப் நியமனம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
இருப்பினும் அந்த அணியால் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிவாய்ப்பைத் தக்க வைக்க முடியவில்லை. இதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த அஸிசுல்லா ஃபாசில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவராக முன்னாள் ஆல் ரவுண்டர் மிர்வாஸ் அஷ்ரஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து தாலிபான் வெளியியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவராக மிர்வாய்ஸ் அஷ்ரப்பை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் பிரதமர் நியமித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.