TNPL 2023: ஜூன் 23ஆம் தேதி முதல் ஆரம்பம்! போட்டி அட்டவணை உள்ளே!

Updated: Sun, Feb 26 2023 17:37 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 7ஆவது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன. 

இந்த தொடருக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த தொடர் திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. 

அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அதேபோல் இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம்  ஜூலை 26ஆம் தேதியும், முதல் குவாலிஃபையர் ஆட்டம் ஜூலை 27ஆம் தேதியும் சேலத்தில் நடைபெறுகிறது. 

இத்தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் ஜூலை 29ஆம் தேதியும், இறுதிப்போட்டி ஜூலை 31ஆம் தேதியும் கோயம்புத்தூரில் நடைபெறுகின்றன. 


டிஎன்பிஎல் போட்டி அட்டவணை:

  • ஜூன் 23 - சேப்பாக் vs நெல்லை - திருநெல்வேலி - இரவு 7.15 மணி
  • ஜூன் 24 - திண்டுக்கல் vs திருச்சி - திருநெல்வேலி - இரவு 7.15 மணி
  • ஜூன் 25 - மதுரை vs சேப்பாக் - திருநெல்வேலி - மாலை 3.15 மணி
  • ஜூன் 25 - சேலம் vs நெல்லை - திருநெல்வேலி - இரவு 7.15 மணி
  • ஜூன் 26 - கோவை vs திண்டுக்கல் - திருநெல்வேலி - இரவு 7.15 மணி
  • ஜூன் 27 - திருச்சி vs திருப்பூர் - திருநெல்வேலி - இரவு 7.15 மணி
  • ஜூன் 30 - நெல்லை vs திண்டுக்கல் - திண்டுக்கல் - மாலை 3.15 மணி
  • ஜூன் 30 - மதுரை vs கோவை - திண்டுக்கல் - இரவு 7.15 மணி
  • ஜூலை 04 - திருப்பூர் vs திண்டுக்கல் - திண்டுக்கல் - இரவு 7.15 மணி
  • ஜூலை 05 - மதுரை vs நெல்லை - திண்டுக்கல் - இரவு 7.15 மணி
  • ஜூலை 06 - கோவை vs சேலம் - திண்டுக்கல் - மாலை 3.15 மணி
  • ஜூலை 06 - திருச்சி vs சேப்பாக் - திண்டுக்கல் - இரவு 7.15 மணி
  • ஜூலை 07 - திண்டுக்கல் vs மதுரை - திண்டுக்கல் - இரவு 7.15 மணி
  • ஜூலை 10 - நெல்லை vs திருப்பூர் - கோயம்புத்தூர் - மாலை 3.15 மணி
  • ஜூலை 10 - திருச்சி vs கோவை - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 11 - சேலம் vs மதுரை - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 12 - சேப்பாக் vs கோவை - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 13 - திருப்பூர் vs சேலம் - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 15 - நெல்லை vs திருச்சி - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 16 - கோவை vs திருப்பூர் - கோயம்புத்தூர் - மாலை 3.15 மணி
  • ஜூலை 16 - சேப்பாக் vs திண்டுக்கல் - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 19 - சேலம் vs சேப்பாக் - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 20 - திருப்பூர் vs மதுரை - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 21 - சேலம் vs திருச்சி - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 22 - சேப்பாக் vs திருப்பூர் - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 23 - கோவை vs நெல்லை - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 24 - மதுரை vs திருச்சி - சேலம் - மாலை 3.15 மணி
  • ஜூலை 24 - திண்டுக்கல் vs சேலம் - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 26 - Eliminator - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 27 - Qualifier 1 - சேலம் - இரவு 7.15 மணி
  • ஜூலை 29 - Qualifier 2 - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
  • ஜூலை 31 - Final - கோயம்புத்தூர் - இரவு 7.15 மணி
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை