BAN vs SL: தமிம் இக்பால் அபார சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!

Updated: Tue, May 17 2022 17:13 IST
Image Source: Google

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று(மே15) தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் அடித்தது.

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் (54) மற்றும் சண்டிமால்(66) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிக அபாரமாக பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 199 ரன்கள் அடித்து, ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 2ஆம் நாளில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் - முகமதுல் ஹசன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் அடித்தது.

இதைத்தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணியில் தமிக் இக்பால் - முகமதுல் ஹசன் இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகம்துல் ஹசன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன், மொமுனுல் ஹக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய தமிம் இக்பால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த தமிம் இக்பால் 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹின் - லிட்டன் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களை எடுத்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 53 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இதையடுத்து 79 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கயுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை