மகளிர் ஆஷஸ் 2023:பியூமண்ட சதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸி!

Updated: Sat, Jun 24 2023 13:46 IST
Tammy Beaumont and Annabel Sutherland hit magnificent tons on Day 2 of the only Women’s Ashes Test! (Image Source: Google)

ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை சதர்லேண்ட் 39 ரன்களுடனும், அலனா கிங் 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அலனா கிங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிம் கார்த்தும் 22 ரன்களில் ரன் அவுட்டாகினார். 

ஆனாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சதர்லேண்ட் சதமடித்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 137 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 473 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளையும், லௌரன் பெல், லௌரன் ஃபிலெர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை எம்மா லம்ப் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டாமி பியூமண்ட் - கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஹீதர் நைட் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பியூமண்ட் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதில் பியூமண்ட் 100 ரன்களுட்னும், நாட் ஸ்கைவர் 41 ரன்களையும் சேர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை