BAN vs IND: ஒருநாள் தொடரிலிருந்து தமிம், டஸ்கின் விலகல்!

Updated: Thu, Dec 01 2022 21:15 IST
Image Source: Google

வங்கதேசம் செல்லும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4ஆம் தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் காயம் காரணமாக விலகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் கூறுகையில், பயிற்சியின்போது தமீம் இக்பால் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹ்மத் முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தத்தை அடுத்து, கூடுதல் பந்துவீச்சாளரான சொரிஃபுல் இஸ்லாம் வங்கதேச ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிம் இக்பால், டஸ்கின் அஹ்மத் போன்ற நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை