மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
.jpg)
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிரங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 104 ரன்காளையும், யஷ்திகா பாட்டியா 58 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபோங்க காக்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் லாரா வால்வோர்ட், சுனே லூஸ் ஆகியோரைத் தவிற மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்ததது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.