இந்திய வீரர்களிடம் துடிப்பு இல்லை - சரண்தீப் சிங்

Updated: Sat, Jan 22 2022 22:04 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் விராட் கோலி கேப்டனாக செயல்படவில்லை. அவர் விலகியதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல். ராகுலும் கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவிடம் இழந்தது. இதையடுத்து தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. 2 போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழந்திருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறுகையில், “இந்தியா 2ஆவது டெஸ்டில் மிக மோசமான தோல்வியை அடைந்தது. இதற்கு வீரர்கள் மட்டுமல்ல, கேப்டன்ஷிப்பும் முக்கிய காரணம். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கே.எல்.ராகுல் மிக அமைதியாக, கூலாக கேப்டன் பொறுப்பில் செயல்படுகிறார். 

ஆனால் விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது மிகுந்த ஆக்ரோஷத்துடனும், மிரட்டும் வகையிலும் செயல்படுவார். அவரைப் பின்பற்றி வீரர்களும் அதே ஆக்ரோஷத்துடனும், துடிப்புடனும் செயல்படுவார்கள். ஆனால் அத்தகைய துடிப்பு தற்போது வீரர்களிடத்தில் இல்லை. 

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் விளையாடி வருகின்றனர். வெங்கடேஷ் ஐயர் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அவரை ஓப்பனிங் இறக்க வேண்டும். ஆனால் அவர் 6ஆவது இடத்தில் களம் இறங்கி தடுமாறினார்.

மிக எளிதான கேட்ச்சுகளை இந்திய வீரர்கள் தவற விட்டனர். ஃபீல்டிங்கின்போது விராட் கோலியை பார்க்க முடியவில்லை. அவர் அருகாமையில் நிற்காமல், பவுண்டரி லைன் அருகே நிற்க வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை