இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் இஷான் கிஷான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதற்கு மத்தியில் அரைசதம் கடந்த ரோஹித் சர்மா, 56 ரன்களில் இஷ் சோதி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 20, ஸ்ரேயாஸ் ஐயர் 25, தீபக் சஹார் 21 ரன்கள் என சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது.
Also Read: T20 World Cup 2021
நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.