CWC 2023 Warm-Up Game: இந்தியா - நெதர்லாந்து போட்டி ரத்து; ரசிகர்கள் அதிருப்தி!

Updated: Tue, Oct 03 2023 19:32 IST
Image Source: Google

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் பயிற்சி போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக கௌகாத்தியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தன்னுடைய முதல் பயிற்சி போட்டியில் எதிர்கொண்டது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்தை கூட வீச விடாமல் மொத்தமாக ரத்து செய்தது. இதனால் ஆரம்பத்திலேயே இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் 2ஆவது பயிற்சி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலையும் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் வீசுவதற்கே தாமதமானது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பொறுத்திருந்து பார்த்த நடுவர்கள் மழை விடாததால் இப்போட்டியும் ரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன் காரணமாக சொந்த மண்ணில் மற்ற அணிகளை விட இந்தியா மட்டுமே பயிற்சி போட்டியில் ஒரு பந்தை கூட எதிர்கொண்டு பயிற்சிகளை எடுக்காமல் நேரடியாக உலக கோப்பையில் களமிறங்க வேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறது. ஆனால் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் மழை காலம் என்பதால் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது மொத்த ரசிகர்களையும் கடுப்பாக வைத்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை