டி20 உலகக்கோப்பை : இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!

Updated: Mon, Oct 18 2021 11:56 IST
Image Source: Google

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் தற்போது தகுதிச்சுற்று போட்டிகளும், அக்டோபர் 23 முதல் சூப்பர் லீக் சுற்று போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதில் இன்று இங்கிலாந்தையும், அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. 

இந்திய அணியில் இருக்கும் வீரா்கள் அனைவருமே ஐபிஎல் போட்டியிலிருந்து நேரடியாக வந்துள்ளதால் அவா்களுக்கு பயிற்சி பிரதான தேவையாக இல்லை. பிளேயிங் லெவனில் இயல்பாகவே இடம் பிடிக்கும் முக்கிய வீரா்கள் தவிா்த்து இதர வீரா்கள் தோ்வை மேற்கொள்ளும் வகையில் அவா்களின் ஃபாா்மை பரீட்சிக்க இந்த ஆட்டங்கள் உதவும். இதனால் அந்த வீரா்களுக்கு பேட்டிங், பௌலிங் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.

பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, தொடக்க வீரராக துணை கேப்டன் ரோஹித் இருக்கும் பட்சத்தில் அவரோடு களமிறக்க கே.எல்.ராகுல், இஷான் என இரு தோ்வுகள் உள்ளன. இருவருக்குமே தலா ஒரு ஆட்டங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் ராகுலுக்கான வாய்ப்பு சற்று அதிக இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் 14 ஆட்டங்களில் 30 சிக்ஸா்கள் உள்பட 626 ரன்களை விளாசியிருக்கிறாா் அவா். இஷானும் மும்பை கேப்டன் ரோஹித்துடன் கடைசி இரு ஆட்டங்களில் தொடக்க வீரராக களம் கண்டு இரு அரைசதங்கள் அடித்து அசத்தினாா்.

தொடக்க பாா்ட்னா்ஷிப்புக்கு ராகுல் தோ்வாகும் பட்சத்தில், பேட்டிங் வரிசையில் இஷான் 4ஆவது இடத்துக்கு வருவாா் என்றால், பாண்டியா 6ஆவது இடத்துக்கு தள்ளப்படலாம். அதேபோல், ஸ்பின்னா்கள் வரிசையில் ஜடேஜாவுடன் வருண் இணைவாா் எனத் தெரிகிறது. 3ஆவது ஸ்பின்னராக சஹா், அஸ்வினில் ஒருவா் தோ்வாகலாம்.

வேகப்பந்துவீச்சுக்கான இடங்களை புவனேஷ்வா், பும்ரா நிரப்பும் நிலையில், ஒரு ஸ்பின்னரை குறைக்கும் பட்சத்தில் கூடுதல் வீரராக ஷா்துலும் இணைவாா்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷண், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவா்த்தி, ராகுல் சஹா், ஷா்துல் தாக்குா், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வா் குமாா், ஹாா்திக் பாண்டியா.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இங்கிலாந்து: ஈயான் மோா்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜோஸ் பட்லா், ஜானி போ்ஸ்டோ, மொயீன் அலி, டாம் கரன், கிறிஸ் ஜோா்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ், ஆதில் ரஷீத், மாா்க் வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை