எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!

Updated: Tue, Nov 21 2023 15:41 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் பங்கேற்றிருந்த டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி லீக் சுற்று முடிவில் 2ஆவது இடம் பிடித்து அசத்தியது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் போராடி தோல்வியடைந்து வெளியேறியது.

ஒரு கேப்டனாக அணியை வெற்றிகரமாக வழிநடத்திய பவுமா ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு குறைந்த அளவிலேயே பங்களித்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவரின் கேப்டன்சி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கேப்டன்சி குறித்த விமர்சனங்களுக்கு மனம் திறந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, “சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அணியின் நலனுக்காக எடுக்கப்படுகிறது.

100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன். யாராவது என்னை சரியான கேப்டன் இல்லை என்று கூறினால் நான் எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென். ஒரு வீரர் சிறப்பாக கேப்டனாக இருக்கும்போது அவரை மதிப்பிடுவதற்கான அளவுகோல் என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை