டி20 உலகக்கோப்பை: சுனில் நரைன் அணியில் இடம்பெறபோவதில்லை - கீரேன் பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன். இவர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவ்வபோது அணிக்கு உதவி வருகிறார்.
ஆனாலும் இவர் நடப்பாண்டி டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் நரைன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து பேட்ஸ்மேன்களை கலங்கடித்துவருகிறார்.
அதேசமயம் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள அணிகள் தங்களில் அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடுவை ஐசிசி அக்டோபர் 15ஆம் தேதிவரை நீட்டித்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணியில் நரைன் சேர்க்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அத்தகவல்களை மறுக்கும் விதத்தில் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சுனில் நரைன் இடம்பெறபோவதில்லை என்று அந்த அணியின் கேப்டன் கீரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசிய பொல்லார்ட்,“சுனில் நரைன் அணியில் இடம்பெறாதது குறித்து ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களிடம் உள்ள பதினைந்து வீரர்களைக் கொண்டு எவ்வாறு தொடரில் முன்னேறுவது என்பது பற்றிதான் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.