பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது வெற்றி பெற உதவியது - ரியான் பராக்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களிலும், கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரியான் பராக், “இப்போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி பொறுவதற்கு இரண்டு போட்டிகள் தேவைப்பட்டாலும், இது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது. இப்போட்டியில் நாங்கள் இன்னிங்ஸை முடிக்கும் போது 20 ரன்கள் குறைவாக இருப்பதாக உணர்ந்தோம். நடு ஓவர்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம், ஆனால் இரண்டு விரைவான விக்கெட்டுகளை இழந்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அதன்பின் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியை கட்டுப்படுத்தினோம். பந்து வீச்சாளர்கள் முன்னேறி எங்கள் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தினர். இன்று ஒரு கேப்டனாக நான் அசட்டையாக உணர்ந்ததைச் செய்தேன். நாங்கள் குறைவாக இருந்த 20 ரன்களுக்கு சிறப்பான ஃபீல்டிங் மூலம் ஈடுகட்டினோம். எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.