தி ஹண்ட்ரெட் 2022: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது டிரெண்ட் ராக்கெட்ஸ்!
தி ஹெண்ட்ரெட் எனப்படும் 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரெண்ட் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானிதது.
அதன்படி களமிறங்கிய பர்மிங்ஹாம் அணியில் வில் ஸ்மித் 7 ரன்னிலும், ஹம்மண்ட் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தானர். பின்னர் ஜோடி சேர்ந்த மொயீன் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மொயீன் அலி 35 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோனும் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதனால் 100 பந்துகள் முடிவில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஹேல்ஸ் அரைசதம் கடந்ததுடன், 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய காலின் முன்ரோ தனது பங்கிற்கு 36 ரன்களைச் சேர்க்க, இறுதிவரை களத்தில் இருந்த ஜோ ரூட் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 97 பந்துகளில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.