தி ஹண்ரட்: பிரேவ் அணியில் மந்தனா, ஒரிஜினல்ஸில் ஹர்மன்பிரீத்!

Updated: Mon, May 10 2021 20:39 IST
The Hundred: Harmanpreet to play for Manchester Originals, Smriti to represent Southern Brave (Image Source: Google)

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உள்பட 24  வெளிநாட்டு வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

இதில் இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ஷபாலி வர்மா உள்ளிட்ட மேலும் இரு வீராங்களை இத்தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வீராங்கனைகள் எந்தெந்த அணிகளில் விளையாட உள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி ஸ்மிருதி மந்தனா சதர்ன் பிரேவ் அணிக்காகவும், ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காகவும், ஷஃபாலி வர்மா பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள வீரங்கனைகள் எந்தெந்த அணிகளில் இடம் பெறுவர் என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை