தி ஹண்ரட் மகளிர்: ரோட்ரிக்ஸின் அதிரடியான ஆட்டத்தால் சூப்பர் சார்ஜர்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Jul 24 2021 22:27 IST
Image Source: Google

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் மகளிர் அணி, வெல்ஷ் ஃபையர் மகளிர் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் சார்ஜர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 30 ரன்களைச் சேர்த்தார். சூர்ப்பர் சார்ஜர்ஸ் அணி தரப்பில் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட்ஸ், கேட்டி லிவிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் கேப்டன் வின்ஃபில்ட் ஹில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறத்தில் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி வந்த ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோட்ரிக்ஸ் 43 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சர் என 92 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன் மூலம் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  மேலும் இப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை