தி ஹண்ரட் மகளிர்: மீண்டும் அதிரடியில் மிரட்டிய ரோட்ரிக்ஸ்!

Updated: Mon, Jul 26 2021 22:20 IST
Image Source: Google

தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று ட்ரெண்ட் ராக்கெட் மகளிர் அணியும், நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் வின்ஃபீல்ட் ஹில் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் வின்ஃபீல்ட் 33 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீண்டும் அரைசதமடித்து அசத்தினார். பின்னர் 41 பந்துகளில் 10 பவுண்டரிகளை விளாசி 60 ரன்களை குவித்திருந்த ரோட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். 

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் நார்த்தன் சார்ஜர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. ராக்கெட்ஸ் அணி தரப்பில் சமி ஜோ ஜான்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராக்கெட்ஸ் அணி     தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நடாலி ஸ்கைவர் - கேத்ரின் ப்ரண்ட் இணை அதிரடியாக விளையாடி இலக்கை எட்ட முயர்ச்சித்தது.

பின் ஸ்கைவர் 33 ரன்களில் ஆட்டமிழக்க, இறுவரை ஆட்டமிழக்காமல் போராடிய கேத்ரின் 43 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், அந்த அணியால் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரெண்ட் ராக்கெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை