ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாதியில் நிறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் மே 08ஆம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் எதிரொளியாகவே இப்போட்டியானது பாதியில் கைவிடப்பட்டது என்ற தகவலும் வெளிவந்துள்ள்து.
இதனையடுத்து 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை பிசிசிஐ ஒரு வார காலம் ஒத்திவைப்பதாக நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ரசிகர்களின் மனதில் இப்போது கேள்வி என்னவென்றால், பாதியில் கைவிடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது நடைபெறுமா என்பது தான்.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பிசிசிஐ தற்போதைய ஐபிஎல் சீசனை மீண்டும் தொடங்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான முக்கியமான ரத்து செய்யப்பட்ட போட்டியும் மீண்டும் முத்ல் பந்தில் இருந்தே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதி பெற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இப்போட்டியானது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போதைய புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருந்தாலும், டெல்லி கேபிடல்ஸ் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டி மீண்டும் நடத்தப்பட்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சாதகமாக முடிவு வந்தால், புள்ளிகள் அட்டவணையின் சமன்பாடு முற்றிலும் மாறிவிடும்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் இப்போட்டியின் முடிவானது பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்தால் அந்த அணி புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளும். இதன் காரணமாக ரசிகர்களும் இந்தப் போட்டியை மீண்டும் பார்க்க நிச்சயமாக விரும்புவார்கள் என்பதால், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது மீண்டும் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.