‘உலகின் 4 ஆயிரம் புலிகள் இருந்தாலும் டிராவிட் ஒருவர் தான்’ - ராஸ் டெய்லர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டைலர் தற்போது வெளியிட்டுள்ள சுய சரிதையான பிளாக் அண்ட் ஒயிட் புத்தகம் தான் தறபோது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புத்தகத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் நிற வெறியை தாம் சந்தித்தாகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி நிர்வாகி தம்மை அறைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஸ் டைலர், ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், வார்னேவுடன் அறைகளை பகிர்ந்த கொண்ட போது இந்த சம்பவம் நடந்தது. நாங்கள் ஓய்வு நேரத்தில் ரந்தாம்புர் தேசிய வனவிலங்க புபூங்காவுக்கு சென்றோம். அப்போது டிராவிட்டிடம் இங்கே எதாவது புலிகளை பார்த்து இருக்குறீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர், இங்கு உலகத்திலேயே அரிதாக இருக்கும் புலிகள் இங்கு இருப்பதாக கூறுகிறார்கள். நான் இங்கு 21 முறை வந்து இருக்கிறேன். ஆனால் நான் ஒரு முறை கூட பார்த்தது இல்லை என்று பதில் அளித்தார். அப்போது நாங்கள் சென்ற வண்டியில் ஒரு மெசஜ் வந்தது.
நாங்கள் இருக்கும் இடத்தில் அருகே ஒரு அரிதான புலி இருப்பதாக வன விலங்கு ஊழியர்கள் கூறினர். அப்போது , அங்கு மற்ற மக்களும் வந்தனர். அனால் யாரும் புலியை பார்ப்பதற்கு பதில், டிராவிட்டை தான் பார்க்க ஆர்வமாக இருந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரிதான புலி நிற்கிறது.
ஆனால், அதை யாரும் பார்க்காமல் டிராவிட்டை பார்க்கிறார்கள் என்று நினைத்தேன். அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. உலகத்தில் 4 ஆயிரம் புலிகள் இருக்கிறது. ஆனால், டிராவிட் ஒரே ஒருவர் தான். இதனால் தான் ரசிகர்கள் பார்த்தார்கள் என்ற உண்மை தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.