திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் - ரவி சாஸ்திரி!

Updated: Wed, Aug 16 2023 15:00 IST
Image Source: Google

இந்திய அணி சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை எதிர்கொள்ள, தற்பொழுது எந்த மாதிரியான அணியை அமைப்பத? என்று தடுமாறிக் கொண்டு இருக்கிறது. எந்த ஒரு வலிமையான அணிக்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங் யூனிட்டில் இடது கை பேட்ஸ்மேன் குறைந்தது இருவராவது இருப்பது, ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இருப்பது மிக மிக முக்கியமானது.

இந்த அம்சங்களை எல்லாம் கொண்டிருக்கின்ற அணிதான் பெரிய தொடர்களில் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும். கலவையான திறமைகள் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வித்தியாசமான கோணத்தை உருவாக்கி நெருக்கடி தருவார்கள். அதேபோல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது சிரமமான காரியம். 

வலது இடது என்று பேட்ஸ்மேன்களுக்கு மாற்றி மாற்றி வீசுவதால் அவர்களின் லைன் அண்ட் லென்த் உடையும். இதனால் ரன்கள் கொண்டு வருவதற்கு எளிதாக இருக்கும். தற்போதைய இந்திய அணியை எடுத்துப் பார்த்தால் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணிக்குள் வருவார்கள் என்றால், இந்திய பேட்டிங் யூனிட்டில் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு யாரும் இடது கை பேட்ஸ்மேன் இருக்க மாட்டார்கள். 

மேலும் ரவீந்திர ஜடேஜாவும் ஆறாவது பேட்ஸ்மேனாகத்தான் வருவார். அதற்குள் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மிக வசதியாக செட்டில் ஆகிவிடுவார்கள். இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் வெளிப்படையாக தன்னுடைய பதிலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது “நமது அணியில் ஜடேஜா இடது கை பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். அதே சமயத்தில் நமது அணிக்கு பேட்டிங் யூனிட்டில் துவக்க இடத்திலும், நடு வரிசையிலும் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும். மேல் இடத்திற்கு இஷான் கிஷான் சரியானவராக இருப்பார். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் அவர்தான் தொடர்ந்து இந்திய அணி உடன் பயணித்து வருகிறார். வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனவே அவருக்கு விக்கெட் கீப்பர் என்ற இடத்தையும் தர வேண்டும். இதற்கு அடுத்து நடு வரிசைக்கு ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடுவதில்தான் இந்திய தேர்வுக்கு குழுவுக்கு பெரிய வேலை இருக்கிறது. 

என்னை பொருத்தவரையில் நம்பர் நான்காவது இடத்திற்கு ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடும் பொழுது, யார் ரன்கள் எடுப்பதற்கு கொலைப்பசியுடன் இருக்கிறார்களோ அவர்களை சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் என்னை பொருத்தவரை திலக் வர்மா மிகச்சரியானவராக இருப்பார். இவர் குறித்து எந்த சந்தேகமும் இல்லாமல் இவரை நடுவரிசையில் இந்திய அணியில் விளையாட வைக்கலாம். அவர் தன்னை தேர்ந்தெடுப்பதற்கான திறமையை இந்திய அணியில் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை