எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது - ராஜத் படிதர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் நரைன் 44 ரன்களிலும், ரஹானே 56 ரன்கலிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுள் இழபிற்கு இழந்து 174 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கல் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் தங்களில் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் சால்ட் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 10 ரன்னிலும், கேப்டன் ரஜத் படிதர் 34 ரன்களையும் சேர்த்த கையோடு பெவிலியன் திருபினர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ராஜத் படிதர், “இப்போட்டியில் எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது, ஆனால் இது எனக்கு ஒரு நல்ல நாளாக இருந்தது. இப்படியே நாம் வெற்றி பெற்றால், அது ஒரு நல்ல நாளாக இருக்கும். அது எனக்கு மிகவும் தெளிவாக இருந்தது - சுயாஷ் ரன்கள் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
Also Read: Funding To Save Test Cricket
அவர் எங்கள் அணியின் முக்கிய பந்து வீச்சாளர், அதனால் நான் அவரை ஆதரித்தேன். இன்னிங்ஸின் 13ஆவது ஓவருக்கு பிறகு குர்னால் பாண்டியா மற்றும் சூயாஷ் சர்மா இருவரும் அபாரமாக பந்துவீசி, அவர்கள் தைரியத்தையும் உறுதியையும் காட்டினர். அவர்கள் விக்கெட் எடுக்கும் மனநிலை மிகவும் அற்புதமாக இருந்தது. மேற்கொண்டு விராட் கோலி போன்ற ஒரு வீரர் உங்களுடன் இருக்கும் போது அது மிகவும் சிறப்பாக மாறுகிறது. இந்த விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.