இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் அணி வீரர்களும் பெங்களூருவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையுடனும், நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான படுதோல்வியுடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இந்த தொடரில் எந்த அணி ஆதிக்கம் செலுத்து தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, பெங்களூருவில் நடைபெறவுள்ள முதல் போட்டி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடும்ப இணைப்பு காரணமாக இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் வெலிங்டனில் பிறந்து வளர்ந்தவன். அப்படி பார்க்கையில் நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.
ஆனால் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று. கூட்டத்தில் சிலர் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் எனது அப்பாவும் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். மேலும் எங்கள் அணியில் கேன் வில்லியம்சன், டாம் லேதம், டெவான் கான்வே, டேரில் மிட்செல் என சில தரமான வீரர்கள் உள்ளனர்.
ரிவர்ஸ் ஸ்வீப்பிங் மற்றும் ஸ்வீப்பிங் செய்வதில் டெவான் கான்வே மிகவும் திறமையானவர். டேரில் மிட்செலும் அப்படித்தான். அதனால் நாங்கள் எங்ளுடைய சிறந்த டெக்னிக்கை கண்டறிந்து அதற்கேற்வாறு செயல்படுவதில் உறுதியுடன் இருக்கிறோம். ஆனால் இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த ஏதெனும் தகவல் வரும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரச்சின் ரவீந்திரா செய்தியாளர்களிடம் பேசிய இந்த காணொளியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்காக 2021ஆம் ஆண்டு அறிமுகமான ரச்சின் ரவீந்திரா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 3 அரைசதங்கள் என 672 ரன்களைக் குவித்துள்ளார். இதில் இரட்டை சதமும் அடங்கும். மேலும் ரச்சின் ரவீந்திராவின் பூர்வீகம் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்