‘கடுமையான சவாலை எதிர்பார்க்கிறோம்’ - ஜோஸ் பட்லர்!

Updated: Sun, Nov 13 2022 09:48 IST
Thrashing India 'Counts For Nothing' In T20 World Cup 2022 Final, Believes Jos Buttler (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3ஆவது முறை. கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதும், கோப்பையை வென்றது. 2010ஆம் அண்டில் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பை சூப்பர் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “வெளிப்படையாக கூறவேண்டு மெனில் பாகிஸ்தான் ஒரு அற்புதமான அணி. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய மிக நீண்ட வரலாறு அவர்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வருவதற்கு இது ஒரு பெரிய பகுதியாகும். 

முன்பே குறிப்பிட்டது போன்று நாங்கள் கடினமான சவாலை எதிர்பார்க்கிறோம். சமீப காலங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சில அற்புதமான ஆட்டங்களை மிகுந்த உத்வேகத்துடன் விளையாடி உள்ளோம். அதுபோல தற்போதைய இறுதிப் போட்டியும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெற்றால் அது, கத்தார் உலகக் கோப்பையில் இங்கிலாந்து கால்பந்து அணிக்கு உத்வேகம் அளிக்கும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை