தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!

Updated: Fri, Nov 17 2023 22:49 IST
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்! (Image Source: Google)

உலகக் கோப்பையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டிகளில் தோற்கும் தென் ஆப்பிரிக்காவின் வழக்கமும் இந்தத் தோல்வியின் மூலம் தொடர்கிறது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை ஒருநாள்  வெல்லும் என அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நேர்மையாக கூறவேண்டுமென்றால், இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நான் ரன் குவிப்பதைக் காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதை விரும்புவதாக குயின்டன் டி காக் தெரிவித்தார். 

இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கும் முன்பு, நிறைய நினைவுகளையும், உலகக் கோப்பை பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டோம். நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், வெற்றி பெற தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடின உழைப்பைக் கொடுத்ததை மறக்க முடியாது. 

இந்த நாள் எங்களுக்கான நாள் இல்லை. ஆனால், தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் உலகக் கோப்பையைக் கண்டிப்பாக வெல்லும். இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய அரையிறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் 116 பந்துகளில் 101 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை