சதமடித்து சாதனைகள் படைத்த திலக் வர்மா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடந்து முடிந்தது. இதில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 107 ரன்களையும், அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தன. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிமலனே, கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியானது இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் சதமடித்து அசத்திய திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்து அசத்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். இதற்கு முன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 279 நாள்களில் சதமடித்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், திலக் வர்மா 22 வயது 005 நாள்களில் சதமடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20ஐ-ல் சதம் அடித்த இளம் இந்திய வீரர்
- 21வயது 279நாள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் v நேபாள்
- 22வயது 005நாள்- திலக் வர்மா v தென் ஆப்பிரிக்கா*
- 23 வயது 146நாள் - ஷுப்மன் கில் v நியூசிலாந்து
- 23 வயது 156நாள் - சுரேஷ் ரெய்னா v தென் ஆப்பிரிக்கா
- 23 வயது 307நாள் - அபிஷேக் சர்மா v ஜிம்பாப்வே
- 24 வயது 131நாள் - கே.எல். ராகுல் v வெஸ்ட் இண்டீஸ்
வெளிநாடுகளில் சதமடித்த இளம் இந்திய வீரர்கள்
- டெஸ்ட் - சச்சின் டெண்டுல்கர் - 17 வயது
- ஒருநாள் - யுவராஜ் சிங் - 22 வயது
- டி20ஐ - திலக் வர்மா - 22 வயது
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20யில் அதிகபட்ச ரன்களை அடித்த இந்திய வீரர்
- 107- திலக் வர்மா* (2024)
- 107 - சஞ்சு சாம்சன்* (2024)
- 106 - ரோஹித் சர்மா (2015)
- 101 - சுரேஷ் ரெய்னா (2010)
- 100 - சூர்யகுமார் யாதவ் (2023)