எங்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டதென தெரியவில்லை - எல். பாலாஜி

Updated: Sat, May 22 2021 22:37 IST
Image Source: Google


கடுமையான பயோ பபுள் சூழலில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்றது. ஆனால் அதனையும் தாண்டி வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

தற்போது தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி தாயகம் திரும்பியும், பாலாஜி தனது வீட்டிற்கும் திரும்பியுள்ளனர். இந்நிலையில், எங்களுக்கு எப்படி தொற்று உறுதியானது என இதுநாள் வரை தெரியவில்லை என்று எல்.பாலாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது மிகவும் கடினமாக இருந்தது. இது மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் வரும் ஒரு அத்தியாசத்தை போன்றது. நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். 

ஆனால் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் நான் பயோ பபுள் சூழலின் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அப்படி இருந்தும் எங்களுக்கு எப்படி தொற்று உறுதியானது என்பது தெரியவில்லை. ஆனால் நல்லவேளையாக நான் தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை