பிளே ஆஃப் சுற்றுக்கு முன் காயத்தை சந்தித்த டிம் டேவிட்; பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி!

Updated: Sat, May 24 2025 10:12 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.

இருப்பினும் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்காக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில் ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் அதில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்து வகையில் அணியின் ஃபினிஷராக அறியப்படும் டிம் டேவிட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்துள்ளார். இந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது அவர் தொடை பகுதியில் காயத்தை சந்தித்திருந்தார். 

அதன்படி டிம் டேவிட் டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த நிலையில், இஷான் கிஷான் அடித்த பந்த தடுக்க முயற்சி செய்யும் போது காயத்தை சந்தித்தார். இதன் காரண்மாக ஆர்சிபி அணியின் பிசியோ அவருக்கு முதலுதவி அளித்தா நிலையிலும் அசௌகரியத்தை உணர்ந்ததன் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். மேற்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய போது அவரால் சரியாக நடக்கமுடியாமல் தடுமாறினார். 

இதன் காரண்மாக ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாடமால் போனால் அது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஏனெனில் ஏற்கெனவே ஆர்சிபி அணியில் ஜோஷ் ஹேசில்வுட், ஜேக்கப் பெத்தெல் உள்ளிட்டோர் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பகிறது.

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் டிம் டேவிட்டும் காயத்தை சந்தித்துள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஃபார்மில் இருந்த டிம் டேவிட் 193 என்ற ஸ்டிரைக் ரெட்டில் 186 ரன்களை சேர்த்துள்ளதுடன், டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றியிலும் பெரும் பங்கினை வகித்துள்ளார். இதன் காரணமாக அவரது கயம் தற்சமயம் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை