தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 315 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது . இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஹாரி ப்ரூக்ஸ் விக்கெட்டை இழந்தது. 186 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதம் பெறும் வாய்ப்பு இழந்தார் .
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று ஆடிய ஜோ ரூட் 153 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . 435 ரன்கள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கான்வே,வில்லியம்சன் மற்றும் யங் ஆகியோர் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். டாம் லேதம் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 137 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது. கேப்டன் டிம் சவுதி 23 ரன்களுடனும், டாம் பிளெண்டல் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேப்டன் சௌதி.
இன்றைய போட்டியில் டிம் சௌதி அடித்த இரண்டு சிக்ஸர்களை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 78 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். இதன் மூலம் எம் எஸ் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் உலக கிரிக்கெட் சாம்பியன் ஆன ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் சாதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறார் சௌதீ.
இதற்கு முன்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 16 சிக்ஸர்களை அடித்து இருந்தார் மெக்கல்லம்.
முதல் டெஸ்ட் போட்டியில் 107 ஆவது சிக்ஸரை அடித்து அவரின் சாதனையை முறியடித்தார் ஸ்டோக்ஸ். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மூன்று விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில் பாலோ ஆன் தவிர்க்க போராடுகிறது நியூசிலாந்து.