சர்வதேச கிரிக்கெட்டில் சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!

Updated: Sat, Oct 19 2024 08:21 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில்,  இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து ஆட்டழிந்தது. இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதீ அரைசதம் கடந்ததுடன், 4 சிக்ஸர்களை விளாசி அசத்தினர். அதன்படி இப்போட்டியில் டிம் சௌதீ 4 விக்கெட்டுகளி கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் 91 சிக்ஸர்களுடன் 6ஆம் இடத்தில் இருந்த நிலையில், டிம் சௌதீ 93 சிக்ஸர்களை விளாசி அச்சாதனையை முறியடித்துள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்த  டிம் சௌதீ சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், ஸ்டீவ் ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.அந்தவகையில் டிம் சௌதீ 390 போட்டிகளில் 294 இன்னிங்ஸ்களில் விளையாடி 137 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் 339 போட்டிகளில் 397 இன்னிங்ஸ்களில் விளையாடி135 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை