சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!

Updated: Tue, Oct 15 2024 09:57 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டிம் சௌதீ, தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சக வீரராக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடவுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அதன்படி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிம் சௌதீ மேற்கொண்டு 3 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் சாதனையை முறிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் 91 சிக்ஸர்களுடன் 6ஆம் இடத்தில் இருக்கும் நிலையில், நியூசிலாந்தின் டிம் சௌதீ 89 சிக்ஸர்களை விளாசி அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் இத்தொடரில் மூன்று சிக்ஸர்களை டிம் சௌதீ அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், ஸ்டீவ் ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அந்தவகையில் டிம் சௌதீ 389 போட்டிகளில் 293 இன்னிங்ஸ்களில் விளையாடி 133 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் 339 போட்டிகளில் 397 இன்னிங்ஸ்களில் விளையாடி135 சிக்ஸர்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை