டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 24ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
Advertisement
இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் கிஷோர் - ராஜகோபால் சதிஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Advertisement
பின் 31 ரன்களில் சாய் கிஷோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் ராஜகோபால் சதிஷ் அரைசதம் கடந்து அசத்தினர். பின் அவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.
லைகா கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், செல்வ குமரன், வல்லியப்பன் யுத்திஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.