டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!

Updated: Mon, Jul 19 2021 23:18 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் ஃபெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக விளையாடி 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இணைந்த கவின்-சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட சாய் சுதர்சன், 43 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர்களை பறக்கவிட்டு 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

முன்னதாக கவின் 33 ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ் ஆகியோரும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ஆட்டமிழந்தனர். 18 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டத்து. 

தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால், கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை