பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் தற்போது லீக் போட்டிகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 

Advertisement

இத்தொடரின் லீக் போட்டிகளில் அதிக புள்ளிக்களைப் பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதிப் பெற்றுள்ளன. 

Advertisement

அதன்படி இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ள ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சேப்பாக் அணி இம்முறையும் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

அதேசயம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளதால், நிச்சயம் கோப்பையை தன்வசப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. மேலும் லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளதால் திருச்சி அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

உத்தேச அணிகள் 

ரூபி திருச்சி வாரியர்ஸ் : அமித் சாத்விக், சந்தோஷ் சிவ், நித்திஷ் ராஜகோபால், முகமது அத்னான் கான், ஆதித்யா கணேஷ், ஆண்டனி தாஸ், எம் மதிவண்ணன், ஆகாஷ் சும்ரா, சர்வன் குமார், ரஹில் ஷா (கே), சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌஷிக் காந்தி (கே), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், ஜெகநாத் சீனிவாஸ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், அலெக்சாண்டர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News