டிஎன்பிஎல் 2021: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

Updated: Fri, Aug 13 2021 22:57 IST
Image Source: Google

பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி  எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 57 ரன்களைச் சேர்த்தார். சேப்பாக் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கௌஷிக் காந்தி - ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் ஜெகதீசன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கௌஷிக் காந்தி அரைசதம் கடந்தார். இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 

இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை