டிஎன்பிஎல் 2021: வெற்றியுடன் பயணத்தை தொடங்க போவது யார்? லைக்கா கோவை கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்

Updated: Sun, Jul 18 2021 13:49 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5ஆவது சீசன் நாளை முதல் (ஜூலை 19) சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்ரபம் மைதானத்தில் தொடங்குகின்றன. கரோனா பாதிப்பு எதிரொலியாக ரசிகா்கள் இன்றி முதன்முதலாக இத்தொடர் நடைபெறுகின்றன.

இளைஞா்கள் மத்தியில் கிரிக்கெட் ஆா்வத்தை மேலும் தூண்டும் வகையிலும், மாவட்டங்களில் கிரிக்கெட் ஆட்டம் வளரவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன. புதிய கேப்டன்கள், பயிற்சியாளா்கள் என ஒவ்வொரு அணிக்கும் புதிய சவால் காத்துள்ளது. 

இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

இதில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், முருகன் அஸ்வின், ஜி பெரியசாமி என நடத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளது அணிக்கு பெரும் பலாமாக அமைந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் காரணமாக வாஷிங்டன் சுந்தர் நடப்பு சீசனில் விளையாடதது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 

லைக்கா கோவை கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த சில சீசன்களாக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் தற்போது அணியின் கேப்டனாக ஷாரூக் கான் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் யார்க்கர் கிங் நடராஜன் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதமியில் இருப்பதால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் தான்.

இரு அணியிலும் அதிரடி வீரர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியுடன் டிஎன்பிஎல் பயணத்தை தொடங்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை