டிஎன்பிஎல் 2022: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது திருப்பூர் தமிழன்ஸ்!

Updated: Wed, Jul 20 2022 23:25 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணியில் அரவிந்த் 19, அனிருதா 4, ராஜ் குமார் 10, ஃபிரான்சிஸ் 17 என அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். 

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மான் பாஃப்னா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். மதுரை அணி தரப்பில் கிரண் ஆகாஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். 

அதிலும் விக்னேஷ் ஐயர், பாலச்சந்தர் அனிரூத், சத்துர்வேத் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மதுரை பாந்தர்ஸ் அணியால் 76 ரன்களை மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் மதுரைப் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை