டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்!

Updated: Sun, Jul 10 2022 19:51 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம்  திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

கோயம்பத்தூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மான் பஃப்னா அதிகபட்சமாக 37 ரன்கள் அடித்தார்.

அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. நெல்லை அணி பவுலர்கள் அபாரமாக பந்துவீசி திருப்பூர் அணியை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டினர். நெல்லை அணி சார்பில் ஈஸ்வரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹரிஷ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சூர்யபிரகாஷுடன் இணைந்து பாபா அபரஜித் அபாரமாக பேட்டிங் ஆடினார். சூர்யபிரகாஷ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சஞ்சய் யாதவ் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் அதிரடியாக பேட்டிங் விளையாடி அரைசதம் அடித்த பாபா அபரஜித் 63 ரன்கள் அடித்தார். இலக்கு எளிதானது என்பதாலும் பாபா அபரஜித்தின் அதிரடி அரைசதத்தாலும் 16ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது.

இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை