டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற  20ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராதா கிருஷ்ணன் 10 ரன்களில் ஆட்டமிழக்க, துஷார் ரஹேஜா 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த சாய் கிஷொர் - விஜய் சங்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்யின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் 45 ரன்களிலும், விஜய் சங்கர் 43 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் அனிருத் - விவேக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சரவண குமார், அவுசிக் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமா - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் மற்றும் அடுத்து களமிறங்கிய பூபதி குமார் ஆகியோர் தலா 14 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிவம் சிங் - ஆதித்யா கணேஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமலவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இதில் ஷிவர்ம் சிங் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும், அதித்யா கணேஷ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News