டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டுவரும் டிஎன்பிஎல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸை எதிர்த்து திருச்சி அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்காக களமிறங்கிய கங்கா ஸ்ரீதர் ராஜூ அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஸ்ரீநிவாசன், மணி பாராதி, ஃபெராரியோ ஆகியோரு அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி மணிமாரன் சித்தார்த் பந்துவீச்சில் அடுத்தது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாஃபர் ஜமால் 22, எஸ்பி வினோத் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கங்கா ஸ்ரீதர் ராஜுவும் 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதில் ராஜ்குமார் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. கோவை அணி தரப்பில் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்,