டிஎன்பிஎல் 2023: ஜூன் 12-ல் ஆரம்பம்; அட்டவணை அறிவிப்பு!

Updated: Sun, Apr 09 2023 22:45 IST
Image Source: Google

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 6  சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறையும், டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். 

இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான் தொடர் அட்டவணையை டிஎன்பிஎல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என மொத்தமாக 32 போட்டிகள் இத்தொடரில்  நடைபெறவுள்ளன. வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் லீக் சுற்றுப் போட்டிகள், கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளன.

இத்தொடரின் முதலாவது தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் சேலத்திலும், இரண்டாவது தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டிஎன்பிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக டிஆரெஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

 

அதுமட்டுமின்றி, பிளே ஆஃப் போட்டிகள் மழையால் தடைபட்டால், மாற்று தேதியும் அறிவிக்கப்படும் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை