டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Tue, Jul 04 2023 23:26 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - சுரேஷ் லோகேஷ்வர் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.  இதில் சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய ஆதித்யா 37 ரன்களைச் சேர்த்து உதவினார். பின்னர் களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 17 ரன்களுக்கும், ஜெகதீசன் கௌசிக் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட்டுகளையும், அஜித் ராம், கருப்பசாமி, மணிகண்டன் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு விஷால் வைத்யா - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷால் வைத்யா 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜேந்திரன் விவேக் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 28 ரன்களிலும், பாலச்சந்தர் அனிரூத் 11 ரன்களுக்கும், கேப்டன் சதுர்வேத் ஒரு ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இறுதியில் புவனேஷ்வரன் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்களைச் சேர்த்தபோதும் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாதில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை